Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

எளிய தமிழில் HTML
து.நித்யா



எளிய தமிழில் HTML

து.நித்யா

 

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.

This book was produced using PressBooks.com.

 

உள்ளடக்கம்


எளிய தமிழில் HTML

HTML

உரிமை

சமர்ப்பணம்

ஆசிரியர் உரை

உதாரணங்கள்

1. HTML - அறிமுகம்

2. HTML tags

3. Paragraph

4. Line Break

5. Headings

6. Bold & Italic tags

7. Big & Small tags

8. Font

9. Strike Superscript & Subscript tags

10. Preservative tag

11. Lists

12. Tables

13. Links

14. Frames

15. Forms

16. HTML5

17. HTML5-ல் புதியன

18. HTML5 - புதிய பக்கக் கட்டமைப்புக் கூறுகள் – New structural elements

19. HTML5 – ன் புதிய வசதிகள்

20. HTML5 – மாற்றங்களும் நீக்கங்களும்

21. HTML5 attributes

22. HTML5-ன் புது input வசதிகள்

23. HTML5 – புது HTML form elements

24. HTML5 – Storage

25. HTML5 Application cache & Canvas

26. HTML5 Canvas

27. Scalable Vector Graphics - SVG tag

28. Embed tag

29. Drag & Drop

30. Geolocation

31. Server Sent Events

32. முடிவுரை

33. ஆசிரியர் பற்றி

34. ஆசிரியரின் பிற மின்னூல்கள்

35. கணியம் பற்றி

36. நன்கொடை

1


எளிய தமிழில் HTML

முதல் பதிப்பு ஏப்ரல் 2015

பதிப்புரிமம் © 2015 கணியம்.

ஆசிரியர் – து.நித்யா – [email protected]

பிழை திருத்தம்: த.சீனிவாசன் – [email protected]

வடிவமைப்பு: த.சீனிவாசன்

அட்டைப்படம் – மனோஜ் குமார் – [email protected]

2


HTML


HTML என்பது இணையப் பக்கங்களை உருவாக்கும் ஒரு கணிணி மொழி.

இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான HTML பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

http://kaniyam.com/learn-html-in-tamil என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

த.சீனிவாசன்

[email protected]

ஆசிரியர்

கணியம்

[email protected]

3


உரிமை

இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்

யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

திருத்தி எழுதி வெளியிடலாம்.

வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.

ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

நூல் மூலம் :

http://static.kaniyam.com/ebooks/Learn-HTML-in-Tamil.odt

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.

4


சமர்ப்பணம்


இந்தப் புத்தகத்தைப் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் சமர்ப்பணம்.

5


ஆசிரியர் உரை


அன்பே சிவம் .

என்னடா HTML புத்தகத்திற்கான ஆசிரியர் உரையை ‘அன்பே சிவம்’ என்று தொடங்குகிறேனே என்று யாரும் பயந்து விட வேண்டாம். தற்போது ஒருசில மாதங்களாக, கடவுள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். பல புது விஷயங்களை உணர்கிறேன். நாம் அனைவரும், நம் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமைய, பணம் தேடி ஓடுகிறோம். ஆனால், ஓரே இடத்தில் பணம் குவிப்பதைவிட, தேவையுள்ளோருக்கு பகிரும் போது, அதிக சந்தோஷம் கிடைக்கிறது. இவ்வாறு பிறருக்கு உதவும் போது, நாம் ஆசைப்படும் விஷயங்கள் தானாகவே நடக்கின்றன. உதவியானது, பணமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. சரியான நேரத்தில் சொல்லப்படும், அன்பான, ஆதரவான, நம்பிக்கையூட்டும் வார்த்தைகளாகவோ, புது விஷயங்களை கற்றுத் தருவதாகவோ கூட இருக்கலாம். இவ்வாறு பகிர்வதால் கிடைக்கும் சந்தோஷத்தையே கடவுள் தன்மையாக அறிகிறேன்.

எனவே, எனக்கு மகிழ்ச்சி கிடைக்க, பணம் மட்டுமே போதுமானதல்ல. என்னிடம் உள்ளவற்றை பிறருக்கு பகிர்தல், நான் அறிந்தவற்றை பிறருக்கு கற்பித்தல் போன்றவற்றைச் செய்தாலே, நான் நினைக்கும் விஷயங்கள் இயல்பாகவே நடந்து விடுகின்றன என்பதை உணர்கிறேன்.

தமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

“தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”

“பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்”

என்ற பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், என் பங்களிப்பும் உள்ளது என்பதே, மிகவும் மகிழ்ச்சி.

தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் என் குடும்பத்தினருக்கும், கணியம் குழுவினருக்கும், FreeTamilEbooks.com குழுவினருக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.

து . நித்யா

நியூ காசில்,

இங்கிலாந்து.,

21 ஏப்ரல் 2015

மின்னஞ்சல்: [email protected]

வலை பதிவு: http://nithyashrinivasan.wordpress.com

6


உதாரணங்கள்


இந்த நூலில் உள்ள HTML உதாரணங்கள் யாவும் https://github.com/tshrinivasan/html-tamil-book-codes இங்கே உள்ளன.

1


HTML - அறிமுகம்


Hyper Text Markup Language என்பதே HTML என்றழைக்கப்படுகிறது. இது ஒரு வலைதளத்தை உருவாக்கப் பயன்படும் மொழி ஆகும்.

HTML மொழியைப் பயன்படுத்தி gedit போன்ற ஒரு Text Editor-ல் உருவாக்கப்படும் program-ஆனது .html எனும் பெயருடன் சேமித்து வைக்கப்படும். பின்னர் இது browser-ல் open செய்யப்படும்போது ஒரு் அழகிய வலைதளமாக வெளிப்படும்.

gedit-ல் கொடுக்கப்படும் சாதாரண text-ஆனது ஒருசில tags-வுடன் இணைந்து hypertext-ஆக மாறுகிறது. இந்த hypertext மூலமாக browser-க்குக் கட்டளைகளைப் பிறப்பிப்பதே markup எனப்படும். இதுவே Hyper Text Markup Language எனும் பெயர் உருவாவதற்கான காரணம் ஆகும்.

2


HTML tags


ஒரு html program-க்குத் தேவையான அடிப்படை tags பின்வருமாறு:

<html> – முதன்முதலில் கொடுக்கப்படும் இந்த tag-ஆனது browser-க்கு இது ஒரு html program என்பதை உணர்த்துகிறது.

<head> – அடுத்ததாக உள்ள இந்த tag-ஆனது browser-ன் தலைப்பை அமைக்கப் பயன்படுகிறது.

<title> – head-ஐத் தொடர்ந்து வரும் title எனும் tag-க்குள் அமையும் வார்த்தைகளே வலைதளத்தின் தலைப்பாக அமைகிறது. </title> எனும் tag தலைப்பு வார்த்தை முடிவுற்றதை உணர்த்துகிறது. இதன் பின்னர் </head> எனும் tag-ஐயும் நாம் முடித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: தலைப்பினை நீங்கள் கொடுத்தாலும், கொடுக்காமல் போனாலும், இத்தகைய tags-ஐ ஒவ்வொரு html program-லும் பயன்படுத்த வேண்டும்.

<body> – வலைதளத்தில் இடம்பெற வேண்டிய மொத்த சாராம்சமும் இந்த tag-க்குள் தான் அமையும். </body> எனும் tag வலைதளத்தில் இடம்பெற வேண்டியவை முடிவுற்றதை உணர்த்துகிறது.

இறுதியாக அமைந்துள்ள </html>